Mar 29 2008

கம்போடியாவில் காலடி வைத்தேன்

Published by at 11:31 pm under Uncategorized

மாலை 6.25(கம்போடிய நேரம்) மார்ச் 14, 2008

நான் இடம் மாறி இறங்கியிருந்தது வியட்னாமின் Da Nang என்ற சர்வதேச விமான நிலையத்தில். இது வியட்னாமின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகும். ஏற்கனவே சிட்னியில் இருந்து புறப்பட்ட விமானம் தாமதமாக இறங்கியது, அடுத்த விமானத்தைப் பிடிக்க இன்னொரு உள்ளக ரயில் எடுத்தது என்று நேரவிரயமாகி இந்தக் குளறுபடிக்குக் காரணமாகி விட்டது. இந்த விமானம் வியட்னாமில் தரித்து அங்குள்ள பயணிகளை ஏற்றிக் கொண்டு போகும் என்று நான் இந்த விமானத்தில் ஏற முன்னரேயே அறிவித்தல் விடப்பட்டிருக்கக் கூடும். ஆனால் எனது விமானச் சீட்டிலோ அல்லது, பயண விபரப் பத்திரத்திலோ (Itinerary) இது பற்றி எந்தத் தகவலும் இல்லை. போதாக்குறைக்கு இந்த Silk Air விமானத்தில் ஒவ்வொரு பயணிக்கும் பிரத்தியோகமான காட்சித் திரையும் இல்லை.

விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிப் பெண் அந்த ஆஜனுபாகு பொலிஸ்காரரிடம் பேசியதைத் தொடர்ந்து அவர் என்னை மீண்டும் ஓடுபாதைக்குச் செல்லும் பஸ் மூலம் மீண்டும் நான் வந்த விமானத்தில் சேர அனுப்பிவைத்தார். அசட்டுச் சிரிப்போடு என் இருக்கையில் அமர்ந்தேன். எனக்குள் ஏதேதோ விபரீதக் கற்பனைகள் செய்து உண்மையில் நான் பயந்து போனேன். ஏறக்குறைய எல்லா ஆசிய நாடுகளுக்கும் முன்னர் பயணித்த அனுபவம் இருந்தாலும் ஒவ்வொரு நாட்டின் விமான நிலையக் குடிவரவுப் பகுதியை அண்மித்தால் தானாகவே ஒரு அலர்ஜி எனக்கு வந்துவிடும்.

மேலதிகமாக புஷ் நாட்டுப் பயணிகள் பலர் ஏறி அமர விமானம் Siem Reap நோக்கிப் பயணித்தது. கம்போடியாவுக்குப் பயணம் செய்யும் மேற்குலகத்தவர்கள் பலர் முதலில் வியட்னாமுக்கும் சென்றே வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

Siem Reap-Angkor சர்வதேச விமான நிலையத்தில் கொஞ்சம் ஓடிப் போய், பின்னர் நிதானமாகத் தன் கால்களைப் பதித்தது Silk Air விமானம். விமானத்தின் இருக்கைச் சன்னல் வழியே அந்த விமான நிலையத்தைப் பார்க்கின்றேன். முன்னர் இருந்த நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முகப்புக் கூரை போல கூம்பு வடிவக் கூரையுடன் கலையழகோடு கூடிய புத்தம் புதிய விமான நிலையமாகக் காட்சியளிக்கின்றது. விமான ஒடுபாதையில் வைத்தே ஆளாளுக்குப் புகைப்படமும் எடுக்கக்கூடிய சுதந்திரத் திருநாடு போல இருக்கின்றது. குடிவரவுப் பகுதியிலும் அதிக கூட்டமில்லை. விசா எடுக்காமல் வந்தவர்களுக்குக்குக் கூட உடனேயே அந்தக் குடிவரவுப் பகுதியில் வைத்தே அனுமதிப் பத்திரத்தில் பதியவைத்து நாட்டின் உள்ளே அனுமதிக்கின்றார்கள். பத்து நிமிடத்துக்குள்ளாகவே எல்லாவிதச் சோதனையும் முடிந்து வெளியேறுகின்றேன். விமான நிலைய உட்புறமே அங்கோர் வாட் பாணியில் சிற்பச் சிலைகளோடு காட்சியளிக்கின்றது. வெளியில் பயணப்பையைப் பறித்து இழுத்துக் கொண்டே வாருங்கள் நம் டாக்ஸியில் போகலாம் என்ற பிக்கல் பிடுங்கல்காரகள் ஒருவரையும் காணோம். அட..ஒன்றிரண்டு பொலிசார் கூட தேமேயென்று பேசாமல் இருக்கின்றார்கள். அதிகார தோரணையையும் காணோம். கையேந்தும் பிச்சைக்காரர்கள் இல்லவேயில்லை.விமான நிலையச் சுற்றுப்புறந்தோறும் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக இருந்தது.

பெரும்பாலான தங்குமிடங்கள் தம் விருந்தினர்களை அழைக்க வாடகைக் காரை ஒழுங்கு செய்துவிடுவார்கள். அதே போல் நான் தங்கவிருக்கும் ஹோட்டலின் சார்பில் வாடகைக்கார்க்காரர் என் பெயர் பொறித்த அட்டையோடு காத்து நின்றார். காரில் அமர்ந்ததும் என் வழமையான சுபாவம் போல் சாரதியிடம் பேச்சுக்கொடுக்க முனையும் போது அவராகவே பேச்சை ஆரம்பித்தார். இந்த விமான நிலையம் போன ஆகஸ்ட் 2006 இல் தான் புதிதாகக் கட்டப்பட்டது. இப்போதெல்லாம் இந்த சியாம் ரீப் நகரைச் சுற்றுலாப் பயணிகள் மொய்க்கின்றார்கள். கடந்த மூன்றாண்டுக்குள் மட்டுமே சின்னதும் பெரியதுமாக ஏறக்குறைய 200 ஹோட்டல்கள் வரை திடீரென்று முளைத்துவிட்டன என்றார். அவரின் கூற்றை மெய்ப்பிப்பது போல விமான நிலையத்தில் இருந்து போகும் வழியெங்கணும் சின்னதும் பெரியதுமாக இருமருங்கிலும் ஹோட்டல்கள்….ஹோட்டல்கள் தான். வேறெந்த வர்த்தக நிறுவனங்களினதும் வானளாவிய கட்டிடங்கள் கண்ணில் தென்படவில்லை. கம்போடிய நாட்டின் முதலிடத்தில் இருக்கும் வருவாயே இந்தச் சுற்றுலாத் தொழில் என்பதை இவை கட்டியம் கூறியன. ஒவ்வொரு ஹோட்டல்களுமே அவை சிறிதோ, பெரிதோ தம் முகப்பில் மட்டும் அங்கோர் காலத்து கட்டிடக்கலையை நினைவுபடுத்துமாற்போல கற்சிலைகளையும் கட்டிட அமைப்பையும் தாங்கி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. Angkor என்ற சொல்லை வைத்தே 99% வீதமான ஹோட்டல்களுக்கும், நுகர்வுப் பொருட்களுக்கும் பெயரிட்டிருக்கின்றார்கள். கம்போடியாவில் ஏகபோக பியர் பானத்தில் பெயர் Angkor Beer.
கம்போடியா குறித்த அறிமுகத்தை புதிதாக வரும் பயணிக்குச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே வந்தார் சாரதி. நான் தங்கவிருக்கும் ஹோட்டலை அண்மித்தது கார்.

ANGKORIANA Hotel இதுதான் நான் தங்க ஏற்பாடு செய்திருக்கும் ஹோட்டல். பயணத்துக்கு முன்னரே Lonely Planet கையேட்டின் உதவியோடு ஒவ்வொரு ஹோட்டலாக ஆய்ந்து கடைசியில் சிக்கிய மீன் இது. காலை உணவுடன் தங்கும் கட்டணமாக 45 அமெரிக்க டொலரை நாளொன்றுக்கு அறவிடுகின்றார்கள். இதை விட மலிவான தங்கும் இடங்களும் இருக்கின்றன. ஆனால் கொடுக்கும் காசு குறையக் குறைய, தங்குமிடத்தின் வசதி குறைந்து, பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என்பது பின்னர் நான் கண்டு தெரிந்த உண்மை. கம்போடியாவில் நாளொன்றுக்கு 10 அமெரிக்க டொலரில் இருந்து 2000 அமெரிக்க டொலர் வரையிலான பலதரப்பட்ட வாடகையோடு தங்குமிடங்கள் இருக்கின்றன. நாளொன்றுக்கு 2000 அமெரிக்க டொலர் கட்டித்தங்கும் Raffles Grand Hotel D’Angkor இன் படம் இதோ. (நமக்கெல்லாம் படத்தில் மட்டுமே பார்க்கலாம் 😉

பொதுவாக நம் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கும் போது அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஓரளவு சிறப்பாகவும், இயன்றவரை நாம் சுற்றிப்பார்க்கப் போகும் இடங்களுக்கு அல்லது நகரப்பகுதிக்கு அண்மித்ததாகவோ இருந்தால் சிறப்பாகவிருக்கும். நான் தங்கியிருந்த ANGKORIANA ஹோட்டலுக்கு நேர் எதிரே Angkor தேசிய நூதனசாலை இருந்ததும், பதினைந்து நிமிடத் தொலைவில் Siem Reap பட்டணம் இருந்ததும் எனக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. எனது ஹோட்டலின் உட்புறம் தோறும் கலைநயம் விளையும் ஓவிய, சிற்ப அலங்காரங்களுடன் கொடுத்த காசுக்கு மேலாகவே இந்த ஹோட்டல் அமைந்திருந்தது. இந்த ஹோட்டல் குறித்த மேலதிக விபரங்களை அறிய: ANGKORIANA Hotel


ஹோட்டலின் உள்ளேயிருந்த சில காட்சிப்பொருட்கள்
நான் பயணப்படுவதற்கு முன்னர் சிட்னியில் வைத்தே நானூறு அமெரிக்க டொலர்களாக மாற்றிக் கொண்டேன். அதில் ஐம்பது டொலரில் மட்டும் ஒரு டொலர் நோட்டுக்களாக ஐம்பதை எடுத்துக் கொண்டேன். பணம் மாற்றும் போது வங்கியில் இருந்தவர் கொடுப்புக்குள் சிரித்தவாறே தந்திருந்தார். ஆனால் இது எவ்வளவு தூரம் கைகொடுக்கும் என்பது கம்போடியா போய் வந்தவருக்குத் தான் தெரியும். கம்போடியாவின் நாணயம் ரியால். ஒரு அமெரிக்க டொலர் என்பது சராசரியாக 4000 கம்போடிய ரியாலுக்கு சமன். இந்தக் கணக்கில் பார்த்தால் பயணம் போகும்போது கூடவே ஒரு லாரியை ஒழுங்குசெய்தால் தான் கம்போடிய நோட்டுக்கட்டுக்களை அடுக்க இலகுவாக இருக்கும். இந்த நிலையை வெகுவாக உணர்ந்த கம்போடியர்கள் இப்போதெல்லாம் தேனீர்ச்சாலையில் தேனீர் குடிப்பதில் இருந்து எல்லாவற்றுக்குமே அமெரிக்க டொலரையே புழக்கத்தில் கொண்டுவந்து விட்டார்கள். கழுதை பசித்தால் கூட கம்போடிய நோட்டைத் தொடாது போல. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீப் போத்தல் என்றால் ஒரு டொலருக்கு இரண்டு, பத்து நிமிஷ சவாரி என்றால் ஒரு டொலர். மீட்டர் சார்ஜ் எல்லாம் கிடையாது. எல்லாமே குத்துமதிப்பில் அமெரிக்க டொலராகக் கேட்கின்றார்கள். ஒரு லீட்டர் பெட்ரோலே 4200 கம்போடிய ரியாலுக்கு மேல் போகின்றது. ஹோட்டலில் நிமிடத்திற்கு மூன்று அமெரிக்க டொலரை தொலைபேசும் கட்டணமாக அறவிடுகின்றார்கள். இதுதான் கொஞ்சம் சூடு.

ஹோட்டல் வந்ததும் முதல் வேலையாக வரவேற்புப் பகுதிச் சேவையாளர்களை நட்புப் பாராட்டி வைக்கிறேன். மேற்கொண்டு நான் செய்யப்போகும் பயண அலுவல்களுக்கு இவர்களிடம் ஆலோசனை கேட்க இலகுவாக இருக்கும் என்ற ஒரு சுயநலம் இருந்ததும் ஒரு காரணம். பின்னர் அது மிகவும் கைகொடுத்தது.

36 responses so far

36 Responses to “கம்போடியாவில் காலடி வைத்தேன்”

 1. noreply@blogger.com (சின்ன அம்மிணி)on 30 Mar 2008 at 2:12 am

  நம்ம பிள்ளையார் கூட ஹோட்டல்ல சிலையா இருக்காரு. முதல் போட்டோல இருக்க சிலை கோயில்கள்ல காணப்படற சிலைகள் போலவே இருக்கு

 2. noreply@blogger.com (சேதுக்கரசி)on 30 Mar 2008 at 2:44 am

  “அங் கோர் வாட்” சென்றீர்களா? கம்போடியா என்றாலே நினைவுக்கு வருவது அதுதான் 🙂

 3. noreply@blogger.com (கானா பிரபா)on 30 Mar 2008 at 3:04 am

  //சின்ன அம்மிணி said…
  நம்ம பிள்ளையார் கூட ஹோட்டல்ல சிலையா இருக்காரு. //

  வாங்க சின்ன அம்மணி

  பிள்ளையார் மட்டுமா, இன்னும் பல விக்கிரகங்களைக் கண்டேன், அவை விரைவில் தொடரில் வரும்.

 4. noreply@blogger.com (இலவசக்கொத்தனார்)on 30 Mar 2008 at 3:14 am

  போன பதிவு மாதிரி திடுக் திடுக் எல்லாம் இல்லாமல் நல்ல படியாக வந்து சேர்ந்தாயிற்று. இனி என்ன நடக்கப் போகிறது? பார்க்கலாம்.

 5. noreply@blogger.com (Haran)on 30 Mar 2008 at 3:14 am

  இந்திய கலையம்சமும்… சீனக் கலையம்சமும் கலந்தது மாதிரியான கலை வேலைப்பாடுகள்ளும் சிலைகளும்…. படங்கள் அருமையாக உள்ளன… நல்ல பதிவு… 🙂
  நான் ஏதோ… வியட்னாமில் உங்களைக் கொண்டுபோய் சிறையில் அடைத்து ஏதேதோ செய்யப்போறாங்கள் எண்டு வாசிப்பமெண்டு வந்தால் நடந்தது இவ்வ்வளவும் தானா… சேச்சே… குறைந்த பட்சம் ஒரு சவுக்கடி வாங்கினனீங்கள் எண்டு கேள்விப் பட்டிருந்தாலே கொஞ்சம் வாசிக்க சந்தோசமாய் இருந்திருக்கும் 😛 ஹஹஹஹ….

 6. noreply@blogger.com (கானா பிரபா)on 30 Mar 2008 at 3:30 am

  //சேதுக்கரசி said…
  “அங் கோர் வாட்” சென்றீர்களா? கம்போடியா என்றாலே நினைவுக்கு வருவது அதுதான் :-)//

  வணக்கம் சேதுக்கரசி

  அங்கோர் வாட் நோக்கியதாகத் தான் என் பயணம் முதலில் இருந்தது. ஆனால் அதை விட ஏராளம் ஆலயங்களைப் பார்க்கும் வாய்ப்பு பின்னர் கிடைத்தது, ஒவ்வொரு ஆலயம் குறித்தும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியோடும், படங்களோடும் தருகின்றேன்.

 7. noreply@blogger.com (.:: மை ஃபிரண்ட் ::.)on 30 Mar 2008 at 3:54 am

  முதல் படத்துல நடுவுல நின்னு ஒருத்தரு டான்ஸ் ஆடுறார் பாருங்க. அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. 😛

 8. noreply@blogger.com (வினையூக்கி)on 30 Mar 2008 at 4:35 am

  :)) ம் அடுத்தப்பகுதியை விரைவில் தாருங்கள்

 9. noreply@blogger.com (எம்.ரிஷான் ஷெரீப்)on 30 Mar 2008 at 4:36 am

  //விமான ஒடுபாதையில் வைத்தே ஆளாளுக்குப் புகைப்படமும் எடுக்கக்கூடிய சுதந்திரத் திருநாடு போல இருக்கின்றது. குடிவரவுப் பகுதியிலும் அதிக கூட்டமில்லை. விசா எடுக்காமல் வந்தவர்களுக்குக்குக் கூட உடனேயே அந்தக் குடிவரவுப் பகுதியில் வைத்தே அனுமதிப் பத்திரத்தில் பதியவைத்து நாட்டின் உள்ளே அனுமதிக்கின்றார்கள். பத்து நிமிடத்துக்குள்ளாகவே எல்லாவிதச் சோதனையும் முடிந்து வெளியேறுகின்றேன். விமான நிலைய உட்புறமே அங்கோர் வாட் பாணியில் சிற்பச் சிலைகளோடு காட்சியளிக்கின்றது. வெளியில் பயணப்பையைப் பறித்து இழுத்துக் கொண்டே வாருங்கள் நம் டாக்ஸியில் போகலாம் என்ற பிக்கல் பிடுங்கல்காரகள் ஒருவரையும் காணோம். அட..ஒன்றிரண்டு பொலிசார் கூட தேமேயென்று பேசாமல் இருக்கின்றார்கள். அதிகார தோரணையையும் காணோம். கையேந்தும் பிச்சைக்காரர்கள் இல்லவேயில்லை.விமான நிலையச் சுற்றுப்புறந்தோறும் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக இருந்தது.//

  ஆஹா,இதற்காகவே அங்கு ஒரு முறை போய் வரவேண்டும் போலிருக்கிறது.
  அருமையாக எழுதுகிறீர்கள். 🙂

 10. noreply@blogger.com (தஞ்சாவூரான்)on 30 Mar 2008 at 5:39 am

  படங்கள் அருமை!
  வெயிட்டிங் 🙂 பொறுமையா போங்க. ஒண்ணும் அவசரமில்லே 🙂

 11. noreply@blogger.com (கானா பிரபா)on 30 Mar 2008 at 5:43 am

  // Haran said…

  நான் ஏதோ… வியட்னாமில் உங்களைக் கொண்டுபோய் சிறையில் அடைத்து ஏதேதோ செய்யப்போறாங்கள் எண்டு வாசிப்பமெண்டு வந்தால் //

  இப்பிடி எத்தினபேர் கிளம்பியிருக்கிறியள் அப்பு 😉

  //இலவசக்கொத்தனார் said…
  போன பதிவு மாதிரி திடுக் திடுக் எல்லாம் இல்லாமல் நல்ல படியாக வந்து சேர்ந்தாயிற்று. இனி என்ன நடக்கப் போகிறது? பார்க்கலாம்.//

  வாங்க நண்பா

  இனியெல்லாம் சுகமே

 12. noreply@blogger.com (பாரதிய நவீன இளவரசன்)on 30 Mar 2008 at 7:41 am

  பயணக் கட்டுரை அருமை. தங்கள் எல்லாப் பயணங்களும் இனிதே சிறக்கட்டும்!

  மேலும் வாசிக்கக் காத்திருக்கிறேன். ‘அங்கோர் வாட்’ பற்றி விரிவாக எழுதுங்கள்… நன்றி.

 13. noreply@blogger.com (கோபிநாத்)on 30 Mar 2008 at 8:51 am

  சூப்பராக சுற்றி காட்டுறிங்க தல..;))

  படங்கள் எல்லாம் அருமை 😉

  முதல் படத்தில் ஒரு நாயகன் நாயகியை வேண்டி நாடனம் ஆடுகிறார். அவருக்கு என்னோட வாழ்த்துக்கள் 😉

 14. noreply@blogger.com (கானா பிரபா)on 30 Mar 2008 at 10:13 am

  //.:: மை ஃபிரண்ட் ::. said…
  முதல் படத்துல நடுவுல நின்னு ஒருத்தரு டான்ஸ் ஆடுறார் பாருங்க. அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. :-P//

  ஓ அந்தக் கம்போடியப் பெண்ணை நீங்க பார்த்திருக்கிறீர்களா 😉

  //வினையூக்கி said…
  :)) ம் அடுத்தப்பகுதியை விரைவில் தாருங்கள்//

  இன்னும் சில நாட்களில் வரும் நண்பா

  //எம்.ரிஷான் ஷெரீப் said…
  ஆஹா,இதற்காகவே அங்கு ஒரு முறை போய் வரவேண்டும் போலிருக்கிறது.
  அருமையாக எழுதுகிறீர்கள். :)//

  வருகைக்கு நன்றி நண்பா

  வாய்ப்புக் கிடைக்கும் போது போய்ப் பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கும்.

 15. noreply@blogger.com (கானா பிரபா)on 30 Mar 2008 at 10:52 am

  //தஞ்சாவூரான் said…
  படங்கள் அருமை!
  வெயிட்டிங் 🙂 பொறுமையா போங்க. ஒண்ணும் அவசரமில்லே :)//

  வாங்க தலைவா

  இப்போ நான் எதுக்கு ஒரு அமெரிக்க டொலர் நோட்டிலும் இருக்குமா என்று கேட்டதற்கு அர்த்தம் புரிஞ்சிருக்கும் இல்லையா 😉

  //பாரதிய நவீன இளவரசன் said…
  பயணக் கட்டுரை அருமை. தங்கள் எல்லாப் பயணங்களும் இனிதே சிறக்கட்டும்!//

  வருகைக்கு நன்றி நண்பரே

  //கோபிநாத் said…
  முதல் படத்தில் ஒரு நாயகன் நாயகியை வேண்டி நாடனம் ஆடுகிறார். அவருக்கு என்னோட வாழ்த்துக்கள் ;)//

  தல

  உங்களுக்கே இது ஓவரா தெரியல ;-))

 16. noreply@blogger.com (ச்சின்னப் பையன்)on 30 Mar 2008 at 12:56 pm

  நல்ல பதிவு.. நல்ல படங்கள்… தொடருங்கள்…

 17. noreply@blogger.com (சுரேகா..)on 30 Mar 2008 at 3:49 pm

  நல்லா அழைச்சுக்கிட்டு போறீங்க!

  எல்லா இடமும் சுத்தி காட்டிருங்க!

  ஒரு டாலர் கூட வேஸ்ட் ஆகிறக்கூடாது. ஆமா..!
  ஹோட்டலில் போனுக்கு மூணு டாலர்தான் ஓவர் ! அடேயப்பா..எல்லா நாட்டிலும் அடுத்தவர் தேவையில் குளிர் காயுறவுங்க இருக்காங்க ! எப்ப அடுத்த பாகம்..!

  எதிர்பார்ப்புடன்

 18. noreply@blogger.com (தூயா [Thooya])on 31 Mar 2008 at 1:44 am

  //ஹோட்டல் வந்ததும் முதல் வேலையாக வரவேற்புப் பகுதிச் சேவையாளர்களை நட்புப் பாராட்டி வைக்கிறேன். மேற்கொண்டு நான் செய்யப்போகும் பயண அலுவல்களுக்கு இவர்களிடம் ஆலோசனை கேட்க இலகுவாக இருக்கும் என்ற ஒரு சுயநலம் இருந்ததும் ஒரு காரணம்.//

  🙂 கிகிகிகி

 19. noreply@blogger.com (வந்தியத்தேவன்)on 31 Mar 2008 at 3:00 am

  பிரபா போட்டோவில் பொடியனாகத் தெரிகிறீர்கள் ஹிஹிஹி. அதிலும் உங்கள் நடனத் தோற்றம் அழகாக இருக்கின்றது ஜோடி நம்பர் சீசன் 3 யிலோ அல்லது மானாட மயிலாட சீசன் 3யிலோ நடன‌மாட முயற்சி செய்யுங்கள்.

  சுவராசியமாக இருக்கின்றது அடுத்த வாரத்தையும் எதிர்ப்பார்க்கின்றேன்

 20. noreply@blogger.com (துளசி கோபால்)on 31 Mar 2008 at 3:20 am

  நேத்துதான் உங்களை நினைச்சேன். பள்ளிக்கூடச் சந்தையில் ‘லோன்லி ப்ளானட் ட்ராவல் சர்வைவல் கிட்’ வாங்கியாந்தேன். (நீங்க எழுதறதெல்லாம் சரி பார்க்க:-))))

  Hotel Serey Pheap (freedom Hotel)இல் தங்கி Angkor Beer குடிச்சு அந்த முட்டை வடிவ சிகப்பு லேபிளையும் புத்தகத்தில் வச்சுருக்கார் அதன் சொந்தக்காரர்:-)))

  (விவரம் சரியா?)

  அவர் மலேசியாவில் ஒராங் உடான் செண்டரும் போயிருக்கார்ன்னு கண்டுபிடிச்சேன். அங்கத்து அட்மிஷன் டிக்கெட்டுதான் இதுக்கு புக்மார்க்:-))))

 21. noreply@blogger.com (கானா பிரபா)on 31 Mar 2008 at 9:31 am

  //ச்சின்னப் பையன் said…
  நல்ல பதிவு.. நல்ல படங்கள்… தொடருங்கள்…//

  வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி சின்னப்பையன் (ச் போடல, ரவிசங்கர் கோச்சுப்பார் 😉

  //சுரேகா.. said…
  நல்லா அழைச்சுக்கிட்டு போறீங்க!

  எல்லா இடமும் சுத்தி காட்டிருங்க!

  ஒரு டாலர் கூட வேஸ்ட் ஆகிறக்கூடாது. //

  ஒரு டாலர் என்ன ஒரு நயாபைசா வேஸ்ட் ஆகாம சொல்லிடுறேன்.

 22. noreply@blogger.com (கானா பிரபா)on 31 Mar 2008 at 9:55 am

  // தூயா [Thooya] said…

  🙂 கிகிகிகி//

  ஹாய் தூய்ஸ்

  என்ன சிரிப்பு கிகிகி;-)

  //வந்தியத்தேவன் said…
  பிரபா போட்டோவில் பொடியனாகத் தெரிகிறீர்கள்
  //

  உந்தக் கிண்டல் தானே வேண்டமெண்டுறது, இவ்வளவு நாளும் என்னை என்ன பெடிச்சியெண்டே நினைச்சனியள் 😉

  //துளசி கோபால் said…
  நேத்துதான் உங்களை நினைச்சேன். பள்ளிக்கூடச் சந்தையில் ‘லோன்லி ப்ளானட் ட்ராவல் சர்வைவல் கிட்’ வாங்கியாந்தேன். (நீங்க எழுதறதெல்லாம் சரி பார்க்க:-))))

  Hotel Serey Pheap (freedom Hotel)இல் தங்கி Angkor Beer குடிச்சு அந்த முட்டை வடிவ சிகப்பு லேபிளையும் புத்தகத்தில் வச்சுருக்கார் அதன் சொந்தக்காரர்:-)))//

  ஆஹா ஆஹா

  கண்காணிப்புப் பணி தீவிரமா இருக்கும் போல 😉

  துளசிம்மா

  நான் வாங்கினது வேற கையேடு (தப்பிச்சேன் ;-))

 23. noreply@blogger.com (அன்பு தங்கை)on 31 Mar 2008 at 10:02 am

  அண்ணா நான் அப்போவே சொன்னேன்,பார்த்து போங்கன்னு,நீங்க விமான பணிபெண்களைப் பார்த்துட்டு போய் தப்பான நாட்டில் இறங்கிவிட்டு ஏன் மத்தவங்க மேல தப்பு சொல்லுறீங்க.

 24. noreply@blogger.com (கானா பிரபா)on 31 Mar 2008 at 10:12 am

  வந்துட்டாப்பா உண்மை விளம்பி

  தங்கச்சி! ஏம்மா இந்தக் கொலவெறி

 25. noreply@blogger.com (அன்பு தங்கை)on 31 Mar 2008 at 10:14 am

  அன்பு தங்கை ,அருமை அண்ணாவின் முகத்தைப் பார்க்க படத்தைக் கேட்டால்,முடியாது என்றவர்.இங்கே மட்டும் போடுவது எதற்கு?
  எல்லாம் உங்க பெண் விசிறிகள் பார்த்து உங்களை ரசிக்க வேண்டும் என்பதற்காகதானே 😉

 26. noreply@blogger.com (யோகன் பாரிஸ்(Johan-Paris))on 31 Mar 2008 at 11:04 am

  //முன்னர் இருந்த நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முகப்புக் கூரை போல கூம்பு வடிவக் கூரையுடன் கலையழகோடு கூடிய புத்தம் புதிய விமான நிலையமாகக் காட்சியளிக்கின்றது//

  பிரபா!
  இது நல்லூருக்கு அந்த நாளில் போனவர்களுக்கு மாத்திரமே விளங்கும்; அடுத்தபகுதியில் படம் இருந்தால் போட்டுக்காட்டவும்.
  இந்த நாணய மாற்று விபரம் பல ஆசிய நாடுகளில் ; மூட்டையில் கட்டும் நிலையேன அறிந்தேன்.
  விடுதித் தகவல்களுக்கு மிக்க நன்றி…என்றாவது பயன்படும்.

 27. noreply@blogger.com (வந்தியத்தேவன்)on 31 Mar 2008 at 11:29 am

  //கானா பிரபா said…

  உந்தக் கிண்டல் தானே வேண்டமெண்டுறது, இவ்வளவு நாளும் என்னை என்ன பெடிச்சியெண்டே நினைச்சனியள் ;-)//

  நான் நினைச்சேன் உங்களுக்கு ஒரு 40 வயது இருக்கும் என்று. ஹிஹிஹி

 28. noreply@blogger.com (இறக்குவானை நிர்ஷன்)on 01 Apr 2008 at 3:58 am

  பிள்ளையாரும் புத்தரும் பக்கத்தில் இருக்கிறார்கள் போல? புத்தர் கை உடைக்கப்பட்டுள்ளதா?

 29. noreply@blogger.com (ஆ.கோகுலன்)on 01 Apr 2008 at 4:34 am

  கம்போடியா முன்னர் சோழர்கள் ஆட்சியில் இருந்தது என நினைக்கிறேன். தொடர் சுவையாக இருக்கிறது. நன்றி.

 30. noreply@blogger.com (கானா பிரபா)on 01 Apr 2008 at 10:43 am

  //யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

  பிரபா!
  இது நல்லூருக்கு அந்த நாளில் போனவர்களுக்கு மாத்திரமே விளங்கும்; அடுத்தபகுதியில் படம் இருந்தால் போட்டுக்காட்டவும்.//

  வணக்கம் அண்ணா

  பழைய நல்லூர் ஆலய முகப்பைப் பின்னர் இணைத்து விடுகின்றேன்.

  //வந்தியத்தேவன் said…
  நான் நினைச்சேன் உங்களுக்கு ஒரு 40 வயது இருக்கும் என்று. ஹிஹிஹி//

  ஆஹா, ஒரு கும்பலே கிளம்பிருக்கா 😉

  //இறக்குவானை நிர்ஷன் said…
  பிள்ளையாரும் புத்தரும் பக்கத்தில் இருக்கிறார்கள் போல? புத்தர் கை உடைக்கப்பட்டுள்ளதா?//

  வாங்கோ நிர்ஷான்

  எங்கட ஊரில் இந்துக் கடவுளரின் கைகள் ஒடிக்கப்படுவது போல் இங்கேயும் புத்தரின் கைகள் ஒடிக்கப்பட்டதன் பின் ஒரு கதை இருக்கு, சொல்லுவேன்.

  //ஆ.கோகுலன் said…
  கம்போடியா முன்னர் சோழர்கள் ஆட்சியில் இருந்தது என நினைக்கிறேன். தொடர் சுவையாக இருக்கிறது. நன்றி.//

  வருகைக்கு நன்றி கோகுலன்

  கம்போடிய வரலாறு குறித்துத் தான் தொடரவிருக்கின்றேன்.

 31. noreply@blogger.com (மாதங்கி)on 10 Apr 2008 at 3:45 am

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கானா பிரபா.

  உங்கள் கம்போடிய பயண பதிவைப் படிக்கையில் புகைப்படங்களில் இன்றியமையாமை மேலும் அறிந்துகொண்டேன். அருமையான பொருத்தமான புகைப்படங்களுடன் சுவையாரமாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

 32. noreply@blogger.com (பேரரசன்)on 10 Apr 2008 at 4:29 am

  மிக அழகாக எழுதுகின்றீர்கள்…

  புகைபடங்கள் அருமை நண்பரே..

 33. noreply@blogger.com (கானா பிரபா)on 11 Apr 2008 at 4:37 am

  வாங்க மாதங்கி மற்றும் பேரரசன்

  வாசித்துத் தங்கள் கருத்திட்டதற்கு நன்றி, அடுத்த பாகத்தை இரண்டொரு நாளில் தருகின்றேன்.

 34. noreply@blogger.com (Anonymous)on 13 Apr 2008 at 1:00 pm

  “Beautiful”,and “Wonderful” Keep up the good work Praba.
  There are only a few people will share the negatives and positives about their trips.
  You are one of them.
  The comments are very interesting to read.
  Please continue guys…….
  I am anxiously waiting for the next one.
  Lakshmi

 35. noreply@blogger.com (கானா பிரபா)on 13 Apr 2008 at 1:02 pm

  வாசித்துத் தங்கள் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி லஷ்மி

 36. noreply@blogger.com (Pulavar Tharumi)on 20 Sep 2011 at 8:10 am

  'கழுதை பசித்தால் கூட கம்போடிய நோட்டைத் தொடாது போல.' -அருமை!

Trackback URI | Comments RSS

Leave a Reply